ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றங்களுடன் விளையாடாமல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. கரூர் நகராட்சியில் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணை நிறைவேற்றப் படாததை கண்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான நிர்வாகத்துறை செயலர், பேருந்து நிலையம் அமைக்காததற்கு தெரிவித்த காரணங்களை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணையை நிறைவேற்றாததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 11ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Discussion about this post