கஜா புயல் நிவாரணப் பணிகளை சுட்டிக்காட்டி திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
காலியாக உள்ள திருவாரூர் தொகுதியில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரில் நிவாராணப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இடைத்தேர்தல் நடத்துவது அதற்கு இடையூறாக இருக்கும் என்றும் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்தன. திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கஜா புயல் நிவாரணப் பணிகளை சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. கஜா புயல் பாதிப்புகள் காரணமாக ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், சுமூக நிலை திரும்பியவுடன் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
Discussion about this post