இந்துஸ்தான் எரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்க முடியுமா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் நிர்மலா சீதாராமன் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
ரஃபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்காக, காங்கிரஸ் கட்சி நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும், அந்நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், தாங்கள் இதுவரை எந்த ஒப்பந்தமும் போடவில்லை என இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் தொடர்பான ஆதாரத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் அல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார். ஒரு பொய்யை மறைக்க நிர்மலா சீதாராமன் பல பொய்களை கூறுவதாக ராகுல் தெரிவித்தார். இந்தநிலையில், இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடு நிலையில் உள்ள ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை, தனது சமூக வலைதள பக்கத்தில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
Discussion about this post