ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டையுடன் மற்ற சேவைகளை இணைப்பது கட்டாயமல்ல என்று கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது கட்டாயமாக்கப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு தனிநபர் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள ஆதார் எண் சமூகரீதியில் பெரிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.இந்நிலையில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுநர் உரிமம் இணைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கான நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதா நிறைவேற்றப்பட்ட பின்பு, ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது கட்டாயமாக்கப்படும் என்று அவர் கூறினார்.இதன்மூலம், குடிபோதையில் வாகனம் ஓட்டி, உயிர்பலி ஏற்படுத்திவிட்டு, வேறு மாநிலத்தில் உரிமம் பெறுவது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post