வாழ்வின் அனைத்து அம்சங்கள் குறித்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட திருக்குறளில் பேசப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்
உலகத் தமிழர் திருநாள் விழாவின் 5ம் ஆண்டு மற்றும் உலகத் தமிழ் வம்சாவளியினர் ஒன்று கூடல் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வேல்ஸ் பல்கலைகழக குழும தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் விஐடி குழும தலைவர் விசுவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் காலை வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கிய ஆளுநர், தமிழ் இனிமையான மொழி என்றும், அதனால் தான் தமிழ் மொழியை விரும்புவதாக கூறினார். 2 அயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட திருக்குறளில் நேர மேலாண்மை, சுற்றுச்சூழல், உணவு பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இசை மற்றும் கட்டுமான பணிகளில் சோழர்களும், பல்லவர்களும் சிறந்து விளங்கியதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.
Discussion about this post