ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இந்தியா 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்ற நிலையில், இரு அணிகள் மோதும் 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மயாங் அகர்வாலும், கே.எல்.ராகுலும் களம் இறங்கினர். முதல் ஓவரிலே இரண்டு பவுண்டரி அடித்த கே.எல்.ராகுல், ஆஸ்திரேலிய வீரர் ஹசில்வுட் (Hazlewood) பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் புஜாரா சிறப்பாக ஆடி தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்துள்ளது. விஹாரி 39ரன்களிலும், புஜாரா 130 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
Discussion about this post