இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைகளை அடுத்த ஆண்டு ரஷ்யா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இந்தியா- ரஷ்யா இடையே எஸ் 400 ரக ஏவுகணை தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்தது.400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் திறன் எஸ் 400 ஏவுகணைகளுக்கு உண்டு. இந்த ஏவுகணைகளை ரஷ்யா அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வழங்கும் என மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ரே மக்களவையில் தெரிவித்துள்ளார்.2023 ம் ஆண்டுக்குள் அனைத்து ஏவுகணைகளும் வழங்கப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post