சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் நுழைவதற்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் தரிசனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பல பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றும் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் 50 வயதுக்குட்பட்ட கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனக துர்கா என்ற இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர். அதிகாலை 3.45 மணியளவில் ஐயப்பனை அவர்கள் இருவரும் தரிசனம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தேதி இந்த இரண்டு பெண்களும் ஐயப்பனை தரிசிக்க சென்ற போது ஐயப்ப பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் இன்று இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் சன்னிதானிற்குள் நுழைந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post