தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையில் உரை நிகழ்த்த உள்ளார். தமிழக சட்டப் பேரவை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரையை, தமிழில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் வாசிப்பார்.
இதனைதொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. பின்னர் 3ம் தேதி அவை கூடியதும், திருவாரூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
Discussion about this post