தான் பிரதமரானதும் ஒரு விபத்துதான் என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் வாழ்க்கை குறித்து தயாராகியுள்ள The Accidental Prime Minister திரைப்படம் குறித்து, தேவ கவுடா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங்.
அவருடைய ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு, மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை, The Accidental Prime Minister என்கிற பெயரில் புத்தமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தை மையமாக வைத்து, அதே பெயரில் தற்போது ஹிந்தி படமொன்று தயாராகியுள்ளது.
விஜய் ரத்னாகர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியானது. ஜனவரி மாதம் 11 ம் தேதி, படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தேவ கவுடா, தான் பிரதமரானதும் ஒரு விபத்துதான் என்று கூறியுள்ளார்.
அதோடு, தான் 10 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்ததாகவும், 10 வருடங்கள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், பிரதமரானது விபத்து என்று எப்படி கூறமுடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post