முயல் வளர்ப்பில் ஆர்வம் காட்டிவருகிறார் பொறியியல் பட்டதாரி ஒருவர். பெரம்பலூரை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர் குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இறைச்சிக்காகவும், தோல் மற்றும் உரோமத்திற்காகவும் முயல்களை வளர்ப்பது உலகின் பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் தம்பிரான்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டிவருகிறார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்ப பொறியாளராக பணிபுரிந்து சுரேஷ், தற்போது பண்ணைகள் அமைத்து 200க்கும் மேற்பட்ட முயல்களை வளர்த்து வருகிறார்.
சென்னையில் பணிபுரிவதன் காரணமாக விடுமுறை நாட்களில் வந்து முயல்களை பராமரித்து வருவதாகவும், ஆடு, மாடு உள்ளிட்டவைகளையும் சேர்ந்து பராமரித்து வருவதால், மற்ற நாட்களில் அவரது தாயார் அவைகள் கவனித்து வருகிறார்.ஒரு மாதம் ஆன முயல் குட்டிகளுக்கு அடர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் அளிப்பதால், 3 மாதத்தில் வளர்ந்து விற்பனைக்கு தயாராவதாகவும், ஒரு ஜோடி 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறார் சுரேஷ்.அதிகளவில் மருத்துவ குணங்கள் கொண்ட முயல் இறைச்சியை, இருதய நோயாளிகளும், முதியோர்களும் தாராளமாக உண்ணலாம் என்கிறார்.படித்த படிப்பிற்கான வேலையை மட்டும் செய்ய நினைப்பவர்களுக்கு மத்தியில், படிப்புக்கான வேலையுடன் கால்நடை வளர்ப்பிலும் களம் கண்டு, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
Discussion about this post