புத்தாண்டை வரவேற்கும் விதமாக தோடர் இனத்தை சேர்ந்த ஆண்கள் கொண்டாடிய ”மோர்ட்வத்” என்று அழைக்கப்படும் வினோத திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நீலகிரி மாவட்டம் தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்தில் புத்தாண்டு திருவிழாவை தோடர் இன மக்கள் சிறப்பாக கொண்டாடினர். நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டு, முன்போ என்றழைக்கப்படும் கூம்பு வடிவிலான குல தெய்வ கோயிலில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து காணிக்கை செலுத்தி, தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடினர்.
Discussion about this post