பொதுவாக டிராபிக் போலீஸ் எல்லோரும் ஹெல்மெட், லைசன்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை தான் கேட்பார்கள். இதில் ஏதாவது ஒன்று இல்லைன்னு சொன்னாலும் பைன் போடுவது வழக்கம். ஆனால் பெரம்பலூரில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வினோதமான தண்டனை வழங்கி வருகிறார்.
அது என்ன தண்டனை தெரியுமா… 10 திருக்குறளை பிழை இல்லாமல் எழுதுவது தான். அப்படி 10 திருக்குறளை பிழையில்லாமல் எழுதினால் எந்தவித அபராதம் இன்றி அவர்களை விட்டுவிடுகிறார். அதுமட்டுமின்றி ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துகிறார்.
மேலும், பள்ளி மாணவ – மாணவிகள் யாராவது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால், அவர்களது வீட்டிற்கே சென்று பள்ளி மாணவ – மாணவிகளின் பெற்றோர் மீது அபராதம் போடுகிறார். இனி உங்கள் பிள்ளைக்கு இரு சக்கர வாகனத்தை தரக்கூடாது என பெற்றோருக்கு எச்சரிக்கை விடுகிறார்.
போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரின் இந்த புதிய அணுகுமுறை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது அணுகுமுறையை பார்த்த மக்களில் சிலர், தற்போது போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post