ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2016-2017-ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்கள் இருந்தது. இந்நிலையில், சில பொதுத் துறை வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட கிளைகள் சீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2017 – 2018ஆம் நிதியாண்டில் ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரமாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மின்னணு சாதனங்கள் வழியான பணப்பரிவர்த்தனை அதிகரித்திருப்பது, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே, தனியார் துறை வங்கிகளைப் பொருத்தவரையில், ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மிக தீவிரமாக செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Discussion about this post