ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட டிரம்ப், அமெரிக்க ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் புறப்பட்டு சென்றார். பின்னர், ஈராக்கில் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளத்திற்கு சென்ற டிரம்புக்கு, அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, அமெரிக்க வீரர்களின் சிறப்பான பணிகளை பாராட்டியதுடன், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் டிரம்ப்.
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக முடிவு எடுத்த பின்னர், ஈராக்கிற்கு டிரம்ப் திடீர் பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Discussion about this post