ரிசர்வ் வங்கியில் ரொக்கம் மற்றும் தங்கம் இருப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆர்பிஐ ஆளுனர் பிமல் ஜலான் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை ரிசர் வங்கி அமைத்துள்ளது. இக்குழு ரிசர்வ் வங்கியின் ரொக்கம், தங்கம் இருப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என ஆராயும்.
மத்திய அரசிடம் ஆலோசித்து நிபுணர் குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. இந்த நிபுணர் குழு தனது முதல் கூட்டத்தில் இருந்து 90 நாட்களில் ஆர்.பி.ஐ.க்கு அறிக்கை அளிக்கும். முன்னதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு ரிசர்வ் வங்கியில் உள்ள உபரி நிதியை கேட்பதாக கூறப்பட்டது.
இதற்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கியில் எவ்வளவு பணம் மற்றும் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என ஆய்வு செய்ய குழு அமைத்திருப்பதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post