தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, அதே இடத்தில் நீடித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post