கூடுதல் அம்சங்களுடன் விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, ரிசர்வ் வங்கி புதிய 10, 50, 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதேபோல் 200 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 2016 முதல் இந்த நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
முன்பு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடுகையில் இவை அளவு மற்றும் வடிவமைப்பில் வேறுபட்டு உள்ளன. ரிசர்வ் வங்கியின் ஆவணப்படி, மார்ச் 31, 2016 ஆம் ஆண்டில் 4.92 பில்லியன் 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. இது மார்ச் 2018 வாக்கில் இரு மடங்கு உயர்ந்து சுமார் 10 பில்லியன்களானது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் அம்சங்களுடன், விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த உள்ளது.
Discussion about this post