கிறிஸ்துமசை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த 30 அடி நீள சாண்டா கிளாஸ் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஒடிசாவின் பூரியை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைக்கும் மணற்சிற்பங்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஒவ்வொரு நிகழ்வையும் குறிக்கும்வகையில் இவர் வடிவமைக்கும் மணற்சிற்பங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றவை.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிக்கும்வகையில், பூரி கடற்கரையில் இவர் வடிவமைத்த 30 அடி நீள சாண்டாகிளாஸ் சிற்பம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.உலகின் மிகப்பெரிய மணற்சிற்பமாக இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசை ஒழிப்போம் என்ற கருத்தை தெரிவிக்கும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு இந்த சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
Discussion about this post