ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், அனுமான் விஹாரி ஆகியோர் களம் இறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உமேஷ் யாதவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்த்திக் பாண்டியா, ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர்.
Discussion about this post