மெட்ரோ ரயில் பாதையில் 16.6 கிலோ மீட்டர் விரிவாக்கம் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் பாதையில் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் 16.6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையை விரிவாக்கம் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இப்பணி நிறைவடைந்தால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்ட்ரல் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிகள் விரிவாக்கப்படும் என்று கடந்த மே மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post