அழிந்து வரும் காங்கேயம் இனக் காளைகளை பாதுகாக்க வலியுறுத்தி, பொள்ளாச்சி அருகே நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
காங்கயம் இன காளைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசு நன்றி தெரிவித்தும், பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலக்குறிச்சியில் விவசாயிகள் சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றன. போட்டியில், காளைகள் சீறிப் பாய்ந்ததை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Discussion about this post