தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பெண்கள் கேரளாவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் தீர்ப்புக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் உச்ச தீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த இயலாத நிலையில் கேரள அரசு உள்ளது.
இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண் பக்தர்களை ஒருங்கிணைத்து மனிதி என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பில் நேற்று 30 பெண்கள் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளா புறப்பட்டு சென்றனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த 11 பெண்கள், ஒடிசா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே கேரள மாநிலம் கோட்டையத்தில் பெண்கள் குழுவுக்கு எதிராக ஆண்களும் பெண்களும் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலிசார் குவிக்கப்பட்டனர். 30 பெண்களும் கேரள காவல்துறைக்கு முறையாக தகவல் தெரிவித்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. 30 பெண்களில் 6 பேரை மட்டும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்கு அழைத்து சென்றதாகவும் தகவல் வெளீயாகியுள்ளது.
Discussion about this post