வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகம் – ஆந்திரா எல்லையான பொன்னை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இரண்டு கார்களை போலீசார் தடுத்தும் நிற்காமல் சென்றன.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கார்களை துரத்திச் சென்றனர். ஒரு கார் தப்பிச்சென்ற நிலையில், மற்றொரு காரை நடு வழியில் நிறுத்தி விட்டு காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்றனர். காரில் சோதனை மேற்கொண்டதில் 20 லட்சம் மதிப்புள்ள 11 செம்மரக்கட்டைகளை கைப்பற்றினர்.
Discussion about this post