அமெரிக்காவில் பணிபுரிபவர்களின் கணவர் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் ‘எச்- 4’ விசா பிரச்சினை தொடர்பான வழக்கு ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு ‘எச்-1பி’ விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த ‘எச்-1பி’ விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரியும் நபரின் கணவர் அல்லது மனைவிக்கு ‘எச்-4’ விசா வழங்கப்பட்டு, அங்கேயே வேலை பார்க்கும் திட்டத்தை 2015ஆம் ஆண்டில் ஒபாமா கொண்டு வந்தார்.
டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர், இந்த திட்டத்தை ரத்து செய்வதில் முனைப்பு காட்டி வந்தார். இதுதொடர்பாக “சேவ் ஜாப்ஸ் அமெரிக்கா” என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு வரும் ஜனவரி 16 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை தீர்ப்பு எதிராக அமைந்தால், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என கூறப்படுகிறது.
Discussion about this post