ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்திருப்பதை மம்தா பானர்ஜி ஏற்க மறுத்து இருப்பது தேசிய அளவில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்த ஸ்டாலின், தோழமை கட்சிகளும் அதனை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் இதற்கு ஆரம்பம் முதலே மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட பிரதான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் பிரதமர் வேட்பாளர் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலத்த அவர், பிரதமர் வேட்பாளர் குறித்து பேச இதுநேரம் அல்ல என்று திட்டவட்டமாக கூறினார். இதனால் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்துள்ளது
Discussion about this post