வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்
தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி ஆகிய வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அரசின் முடிவுக்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த 3 வங்கிகளும் இணைக்கப்பட்டால் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு பாதிக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர். வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு, பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 3 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வரும் 26 ம் தேதி அன்றும் இதே கோரிக்கைகளை வலிறுத்தி வேலை நிறுத்தம் செய்ய 2 வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
Discussion about this post