இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு உதவும் ஜிசாட் 7ஏ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எஃப் 11 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் இந்த செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏந்திச் சென்றது.
ஜிசாட் 7 செயற்கைக்கோள் இந்திய விமான படைக்கு உதவும் வகையில் ரேடார் நிலையங்கள், விமான தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்தும். இந்த செயற்கைகோள், குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக எடைகொண்ட செயற்கைக் கோள்களை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 13வது முறையாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post