காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்திருப்பதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். இதற்கு பிற தோழமை கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கோரினார்.
இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சீதாராம் யெச்சூரியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ஸ்டாலின் அறிவித்தது அவரது சொந்தக் கருத்து என்றார். மக்களவை தேர்தலுக்குப் பிறகே பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும் என அவர் கூறினார்.
Discussion about this post