பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டை 2020 ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகள் அமல்படுத்தத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. இதில் அதிகரித்து வரும் புவியின் வெப்பத்தை கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை அமெரிக்க உள்ளிட்ட சில உலக நாடுகள் ஏற்க மறுத்தன.
இந்நிலையில் இதுகுறித்த பேச்சுவார்த்தை போலந்து நாட்டில் நடைபெற்று வந்தது. ஒப்பந்தத்தின் சில சரத்துக்களை எதிர்த்த நாடுகளுடன் நடைபெற்ற விவாதத்தில், உடன்பாடுகள் எட்டப்பட்டு, 2020 ஆம் ஆண்டிற்குள் ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த மைக்கேல் குர்திகா தெரிவித்துள்ளார். இதனை உலக நாடுகள் செயல்படுத்த தொடங்கினால் புவியின் வெப்ப நிலை 2 டிகிரி அளவிற்கு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post