இலக்கிய துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் ‘ஞானபீடம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சாகித்ய அகாடமி, ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது. 7 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் சிலை ஆகியவை இந்த விருதுடன் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான 2018 ஞானபீடம் விருது பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷுக்கு வழங்கப்பட உள்ளது. கொல்கத்தாவில் பிறந்த இவர், தற்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார். ஏற்கனவே பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை அமிதவ் கோஷ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post