ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியுமா என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
ரபேல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடமுடியாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் உதிரிபாகம் தயாரிப்பில் எச்.ஏ.எல் நிறுவனத்தை ஏன் சேர்க்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட இயலுமா? என பிரதமர் மோடிக்கு சவால் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி அஞ்சவில்லை என்றால் ஏன் கூட்டுக்குழு விசாரணை நடத்த கூடாது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post