தெலங்கானாவில் இரண்டாவது முறையாக முதலமைச்சராகியுள்ள சந்திரசேகர ராவ் தனது மகனை கட்சியின் செயல் தலைவர் ஆக்கியுள்ளார். தெலங்கானாவில் இரண்டாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று சந்திரசேகர ராவ் நேற்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று தனது மகனும் எம்.எல்.ஏவுமான தாரக ராம ராவை கட்சியின் செயல் தலைவராக்கியுள்ளார்.
சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதால் தனது மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தாரக ராம ராவ் கடந்த ஆட்சியில் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். அடுத்த வாரம் அமைய உள்ள புதிய அமைச்சரவையில் அவர் இணைத்துக்கொள்ளப்படுவார் என தகவல்கள் தெரிகின்றன.
Discussion about this post