பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமில்லாமல், லிட்டருக்கு 72 ரூபாய் 94 காசுகளாகவும், டீசல் 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு 68 ரூபாய் 18 காசுகளாகவும் விற்பனையாகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. இதையடுத்து, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் 72 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து 68 ரூபாய் 18 காசுகளாகளுக்கு விற்பனையாகிறது.
Discussion about this post