3 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அரசியல் வரைபடத்தில் காங்கிரசின் ஆதிக்கம் மீண்டும் தொடங்கி உள்ளது.
மே 2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் 21 ஆக இருந்தது. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அருணாசல பிரதேசம், குஜராத், அரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும், தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
பஞ்சாப், புதுச்சேரி. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கத்தில் மாநில கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன.
Discussion about this post