பாரதிய ஜனதாவின் வெற்றித்தேர் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பா.ஜ.க. ஆட்சி செய்து வந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் அக்கட்சி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தோல்வி பா.ஜ.க.வுக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் பா.ஜ.க. தோல்வி குறித்து சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. சிவசேனா கட்சித்தலைவர் சஞ்சய் ராவத் பேசும் போது, பா.ஜ.க.வின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டு விட்டதை தேர்தல் முடிவு காட்டுவதாக கூறினார். இது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
Discussion about this post