கேரள மாநிலம் கண்ணூரில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்ட 4-வது சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் அபுதாபிக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட முதல் விமானத்தை சுரேஷ் பிரபுவும், பினராயி விஜயனும் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.
Discussion about this post