ரிசர்வ் வங்கியின் சுயாட்சி – சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலிமையான தன்னாட்சி அமைப்புகள் இருப்பதுதான் நாட்டுக்கு நல்லது என்றும் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், “ஆப் கவுன்சில்; தி சேலஞ்சஸ் ஆப் தி மோடி – ஜேட்லி எக்கானமி” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூல் விரைவில் வெளிவர உள்ளது. இந்தநிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ரிசர்வ் வங்கியின் சுயாட்சி, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலிமையான நிறுவனங்கள் இருந்தால் மட்டுமே நாடு நலன் பெற முடியும் என்றார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள ஜிடிபி குறித்த புள்ளிவிவரங்கள் குழப்பத்துடன் இருப்பதால், அதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பொருளாதாரம் குறித்த முடிவுகள் எடுக்கும் முன் ஆலோசனை நடத்துவது அவசியம் என்றும் அரவிந்த் சுப்பிரமணியன் கூறினார்.
Discussion about this post