அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி டெல்லி ராம்லீலா திடலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்று வரும் தர்ம சபா கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இந்து அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதையொட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் சிவசேனா சார்பிலும், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பிலும் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தர்ம சபா கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ராம்லீலா மைதானத்தில் ஏராளமான இந்து அமைப்பினர் குழுமியுள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு மைதானத்தில் கூடியுள்ளதால், முன்னெச்சரிக்கையாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Discussion about this post