ஜனவரி மாத இறுதிக்குள் அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 786 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மிதிவண்டிகளை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு அடுத்த ஆண்டில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சீருடைகள் வழங்கப்படும் என்றார். 12ஆம் வகுப்பு முடித்த 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆடிட்டர் படிப்பிற்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post