ராஜஸ்தான் மாநிலம் வாக்குப்பதிவு முடிந்து சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் கேட்பாரற்று சாலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 11-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.
இந்நிலையில் கிருஷ்ணகஞ்ச் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று ஷாகாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரற்று கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை கைப்பற்றி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 2 தேர்தல் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post