தெலங்கானாவில் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், 70 சதவீதக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டப் பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இங்கு காங்கிரஸ் கட்சி, மக்கள் முன்னணி என்ற பெயரில் தெலுங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி, இந்திய கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் எம்ஐஎம் கட்சிகள் ஒரு அணியாக தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க தனித்து போட்டியிட்டது.
மாலை 5 மணி நிலவரப்படி 70 சதவீதக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த 13 மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி ஒரு மணி நேரம் முன்னதாகவே வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. பாட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டதால் அவர் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் சென்றார்.
Discussion about this post