அடிலெய்டில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.
கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் முதலில் நடைபெற்ற இருபது ஓவர் போட்டி டிராவில் முடிந்தது.
இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. அடிலெய்டில் நேற்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி ஆட்டமிழந்தது. புஜாரா அதிகபட்சமாக 129 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஸ்டார்க் மற்றும் ஹெட் களத்தில் உள்ளனர்.
Discussion about this post