இந்திய ரூபாயை செலுத்தி, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியவுடன், அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.
ஈரானிலிருந்து பிற நாடுகள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4-ம் தேதிக்குள் நிறுத்த வேண்டும் எனவும் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இருப்பினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்தது. இதனைதொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை அமெரிக்க டாலராக செலுத்தாமல், இந்திய ரூபாயாக செலுத்த, இந்தியா – ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதன்படி, ஈரான் தேசிய கச்சா எண்ணெய் கழகத்தின் யூகோ வங்கி கணக்கில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பணம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post