வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் பேசினால் காங்கிரஸின் பெரிய தலைவர்கள் சிக்குவார்கள் என மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சமர்பூரில் பிரதமர் மோடி இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியாவை நேரடியாக விமர்சித்தார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சோனியா காந்தியே நடத்தியதாக கூறியவர், டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் ஜாமினில் இருப்பவர்களை மக்கள் நம்பமாட்டார்கள் என விமர்சித்தார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சியில் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன், ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அவர் விமர்சித்தார். இதில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியா இழுத்து வந்துள்ளதாகவும், அவர் ரகசியங்களை பேசினால் பெரிய தலைகள் சிக்குவார்கள் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post