நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பேருந்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்காவை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்செங்கோடு அடுத்த வரப்பாளையம் பகுதியில் அரசு பேருந்து மூலம் பெங்களூருவில் இருந்து, 9 மூட்டைகளில், 400 கிலோ குட்கா பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி வந்துள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற அதிகாரிகள் கடத்தி வரப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர். குட்கா மூட்டைகளை எடுத்துச் செல்ல இருந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய மர்ம நபர்களை திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Discussion about this post