ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மறுப்பது ஏன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருக்கும் போது, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அத்துமீறி செயல்படுவதாக குற்றம்சாட்டினார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் மாநில அரசு பரிந்துரை செய்தும், அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளுநர் மீது கிரமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Discussion about this post