ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேர் ஆஜராகி உள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள கலச மாஹலில் செயல்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் உறவினர்கள், நண்பர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், அவரது வீட்டில் வேலை பார்த்தவர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. அதேசமயம் ஆணையம் தரப்பில் விசாரணை முடிந்த சாட்சியங்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்,
இந்த நிலையில் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன், நியூரோ டெக்னீசியன் யுவஸ்ரீ, தீவிர சிகிச்சை பிரிவு டெக்னிசியன் அருண், உள்ளிட்டோர் ஆஜராகி உள்ளனர்.
Discussion about this post