சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2011ஆம் ஆண்டு தொடங்கிய உள் நாட்டுப்போர் 7வது ஆண்டாக நீடித்து வருகிறது. இந்த சண்டையில் குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
அரசுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும், சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படையினரும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அலெப்போ நகரில் ரசாயனம் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை கொண்டு கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பொதுமக்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Discussion about this post