அங்கீகாரமற்ற மனைகளுக்கு வரன்முறை கட்டணத்துடன் அபராதம் செலுத்தினால் அங்கீகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016 ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 16 ம் தேதிக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட மனைகளுக்கு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கான காலக்கெடு கடந்த 3 ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கீகாரம் பெறாத மனைகளின் உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ, டி.டி.சி.பி ஆகியவற்றுக்கு வரன்முறை கட்டணம் மற்றும் அபராத கட்டனத்துடன் விண்ணப்பித்து அங்கீகாரம் பெறலாம் என வீட்டுவசதித்துறை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் 3 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post